மிக உயரமான பங்கி ஜம்ப் சாகசத்தின் போது உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி!
சீனாவில் மிக உயரமான பங்கி ஜம்ப் தளத்தில் இருந்து குதித்து ஜப்பானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சுற்றுலா பயணி மயக்கமடைந்த சில மணித்தியாலத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த 56 வயதான மக்காவ் சீனாவில் உள்ள மக்காவ் கோபுரத்தில் இருந்து 764 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இதன் விளைவாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரை அவசர சிகிச்சைக்காக காண்டே எஸ். ஜனுவரியோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில், மக்காவ் டவரில் பங்கி ஜம்ப் மற்றும் பிற இடங்களை நடத்தும் நிறுவனமான AJ Hackett இன் Skypark என்ற அவர்களின் இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் செயல்பாடுகளில் பங்கேற்கும் முன் அவர்களுக்கு ஏதேனும் மருத்துவக் கவலைகள் இருந்தால் அவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்துகிறது.