ஒரே ஒரு புகைப்படத்தால் டுவிட்டரை தெறிக்க விட்ட ஜப்பானின் புதிய பிரதமர்
ஜப்பானின் புதிய பிரதமரான ஃபுமியோ கிஷிடா, டுவிட்டரில் பகிர்ந்த ஒற்றை புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தேர்வான சில மணிநேரங்களில் டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது, ஹிரோஷிமாவின் பிரபல உணவான ஒகோனோமியாகி-யின் படத்தை பகிர்ந்ததுடன்,
என்னுடைய மனைவி இன்று எனக்காக, எனக்கு ரொம்பவும் பிடித்த ஒகோனோமியாகி செய்து வைத்திருந்தார்.
அந்த உணவு எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும், நன்றாக சமைப்பார்.
இன்று அது மிகவும் அற்புதமாக இருந்தது, என் வாழ்நாளுக்கும் நான் இதை மறக்கமாட்டேன். நன்றி என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வருவதுடன், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
帰宅すると、妻の裕子がお好み焼きを作ってくれていました。インスタライブで私が、「妻の作ってくれるお好み焼きが大好きです」と言っていたからです。
— 岸田文雄 (@kishida230) September 29, 2021
いつも最高に美味しいけど、今日は、一生忘れられない美味しさでした。ありがとう。 pic.twitter.com/vsBesywmCG