காதல் திருமணம் செய்து கொண்ட ஜப்பான் இளவரசி... வெளியான முக்கிய தகவல்
அரச குடும்ப வாழ்க்கையை துறந்து காதல் திருமணம் செய்து கொண்ட ஜப்பான் இளவரசி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் இளவரசியான மாகோ கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்து கொண்டார்.
ஜப்பானிய சட்டத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தங்களின் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படுவது அந்நாட்டின் வழக்கமாகும்.
அந்த வகையில் ஜப்பான் இளவரசி காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது அரச குடும்பத் தகுதியை இழந்து விட்டார். இளவரசியின் கணவர் கீ கொமுரோ நியூயார்க்கில் சட்டம் படித்து அங்கே வேலை செய்து வருகின்றார்.
இதனால் இளவரசி திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் மொத்தமாக குடியேறக்கூடும் என்று வதந்திங்கள் பரவியது. இந்நிலையில் இளவரசி தனது கணவருடன் விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் பரவிய வதந்திங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.