கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரை குற்றம் கூறும் அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை குறை கூறி வருவதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தன் பங்குக்கு குறை கூறத் துவங்கியுள்ளார்.

கனேடியர்களின் வாழ்க்கத்தரம் முன்னேறாமல் இருப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் கனடாவுகு எதிராக பல இடுகைகளை வெளியிட்டுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ்.
அவற்றில், கனேடிய மக்களின் வாழ்க்கைத்தரத்தின் தேக்கநிலைக்கு, அதாவது, வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருப்பதற்கு, வெளிநாட்டில் பிறந்தவர்கள் கனடாவில் வாழ்வதுதான் காரணம் என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ்.
ஆனால், ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமேதான் ஒரு நாட்டின் வாக்கைத்தரத்தை தீர்மானிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளன ஊடகங்கள்.

கனேடிய நண்பர்களே, உங்கள் நாட்டு அரசியல் அமெரிக்க அரசியல் மீதே விடாப்பிடியாக கவனம் செலுத்திவருகிறது.
ஆனால், உங்கள் ஊடகங்கள் கூறுவதுபோல, உங்கள் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையாமல் இருப்பதற்குக் காரணம் ட்ரம்ப் அல்ல, நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் தலைவர்களே அதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார் வேன்ஸ்.
ஏற்கனவே கனடா புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, தன் பங்குக்கு புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார் வேன்ஸ்.