டைட்டானிக் ஹீரோவிடம் பேசிய அமேசான் நிறுவனர் காதலி! 6 நொடிகளில் 6 மில்லியன் பார்வையாளர்கள்... வைரல் வீடியோ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்ற LACMA Art மற்றும் Film Gala நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் அமேசான் நிறுவனர் jeff bezos தனது காதலி Lauren sanchez உடன் பங்கேற்றார்.
அப்போது ஹாலிவுட் நடிகர் Leonardo DiCaprio ஐ சந்தித்த Lauren sanchez வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்களை போல பேசிக்கொண்டனர்.
அதில் Lauren sanchez , லியானர்டோவிடம் செல்லமாக அடம்பிடிப்பது போலவும் அதற்கு லியானர்டோ கண்டிப்பது போலவும்தான் இருக்கிறது. இதனை வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சி சமூவலைத்தளங்களில் தற்போது வைரலாகி பரவி வருகின்றது.
வெறும் 6 நொடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததுள்ளது.
பலரும் Lauren sanchez மற்றும் டைட்டானிக் ஹீரோ Leonardo DiCaprio இணைத்து கேளியாக பேச தொடங்கிவிட்டனர்.
இதனை அறிந்த அமேசான் நிறுவனரும் Lauren sanchez காதலருமான jeff bezos தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியானர்டோவை டேக் செய்து, “லியோ...இங்கே கொஞ்சம் வா..உனக்கு ஒன்னு இருக்கு “ என ஒரு பலகையிடன் இருக்கு புகைப்படம் ஒன்றை வைத்து அதில் “இங்கு அபாயகரமான பள்ளத்தாக்கு உள்ளது. ஜாக்கிரதை” என கிண்டல் செய்யும் விதமாக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் வேடிக்கையாகவே இந்த வைரல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இருப்பினும் இந்த வேடிக்கையான இந்த பதிவையும் நெட்டிசன்கள் அதையும் கிண்டல் செய்துதான் வருகின்றனர்.
Leo, come over here, I want to show you something… @LeoDiCaprio https://t.co/Gt2v9JZTNz pic.twitter.com/KqGLB839NI
— Jeff Bezos (@JeffBezos) November 8, 2021