Jeju Air ; ஒரே நாளில் ரத்து செய்யப்பட்ட 68,000 விமான டிக்கெட்டுகள்!
தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்தால் 68,000 பயணிகள் தமது விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 68,000 பயணிகள் தங்கள் விமானச்சீட்டுகளை ரத்துசெய்துள்ளதாக Jeju Air நிறுவனம் தெரிவித்தது.
Jeju Air விமானம் ஒன்று விபத்து
கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) முவான் (Muan) விமான நிலையத்தில் Jeju Air விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அச்சமடைந்த பயணிகள், தங்கள் விமானச்சீட்டுகளை ரத்துசெய்துள்ளதாக Jeju Air நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக, மேற்படி விபத்தில் சம்பந்தப்பட்ட போயிங் 737-800 ரக விமானங்களைத் தவிர்க்கவும் பயணிகள் முற்படுகின்றனர்.
அதோடு , தங்களுடைய பயணத்தில் எந்த ரக விமானம் பயன்படுத்தப்படும் என்று பயணிகள் பலர் கேட்பதாகப் பயண முகவர் நிறுவனங்கள் கூறியுள்ளன.
போயிங் 737-800 ரக விமானச் சீட்டுகளை ரத்துசெய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்வதாக அவை தெரிவித்தன.
அதேவேளை தென் கொரியாவில் மிகப் பெரிய பயண முகவர் நிறுவனத்தில் ஒன்று, விமானச்சீட்டுகளை ரத்துசெய்யும்படி 400 பேரிடமிருந்து அழைப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தது.