சீன அதிபரை ஜோ பைடன் விமர்சித்தமை தொடர்பில் ஆண்டனி பிளிங்கன் கருத்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சர்வாதிகாரி என கூறியுள்ளமைத் தொடர்பில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென் பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற ஆசியா - பசுபிக் பொருளாதார் கூட்டமைப்பின் மாநாட்டின் போது சீன அதிபருடனான சந்திப்பில் கலந்துக் கொண்ட பின்னர் ஜோ பைடன் சீன அதிபரை சர்வாதிகாரி எனத் தெரிவித்திருந்தார்.
ஆண்டனி பிளிங்கன்
இது தொடர்பில் ஆண்டனி பிளிங்கன் “இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை இதை ஏன் எல்லோருக்கும் செய்தியாக இருக்கிறது எனத் தெரியவில்லை. நாம் இருவிதமான அரசு அமைப்புகளைக் கொண்டிருக்கிறோம்.
அதிபர் எப்போதும் நேர்மையாக தான் பேசுவார். நமக்காகத் தான் அவர் பேசியுள்ளார்.நேற்று நடந்த சந்திப்பில் நிகழவிருக்கும் மாற்றங்களைத்தான் கவனிக்க வேண்டும். சீனாவுடனான உறவில் நமக்கு சில கடமைகள் உள்ளன.
வேறு எந்த உறவையும் விட அதிக விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய உறவு இது. போட்டித்தன்மையான இவ்வுறவு மோதலாக மாறாதிருக்க நாம் முயற்சிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.