மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் ஜோ பைடன் - டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கான்ரோ நகரில் குடியரசுக் கட்சியினரின் பேரணியில் முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையில் அதிபர் ஜோ பிடனின் தலையீட்டை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- வாஷிங்டனில் உள்ள அனைவரும் உக்ரைன் எல்லையை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் ஆர்வமாக உள்ளனர், ஆனால் இப்போது உலகின் மிக முக்கியமான எல்லை உக்ரைன் எல்லை அல்ல, அது அமெரிக்க எல்லை. அதைப் பாதுகாக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியின் முதல் கடமை அமெரிக்க எல்லைகளை பாதுகாப்பதாகும். ஆனால் தற்போதைய அமெரிக்க நிர்வாகம் அதற்கு பதிலாக மற்ற நாடுகளின் "படையெடுப்பு" பற்றிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவுடனான எல்லையைப் பாதுகாக்க ஜோ பிடன் எந்தப் படைகளையும் அனுப்புவதற்கு முன்பு, டெக்சாஸுடனான நமது எல்லையைப் பாதுகாக்க அவர் துருப்புக்களை அனுப்ப வேண்டியிருந்தது. ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையில் பதட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை ஜோ பிடன் எழுப்பினார்.
என டிரம்ப் கூறினார்.