சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த ஜோ பைடன் மகன்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Joe Biden மகன் ஹண்டர் மீது வருமான வரி செலுத்த தவறியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெலாவேரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹண்டர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்குரைஞர்களுடன் உடன்பாட்டை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா தோட்டத்தில் இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதற்காக 37 எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இவ் விடயம் வெளியாகியுள்ளது.