இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோ பைடன்

Vethu
Report this article
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. இருதரப்பினர்களும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான மேற்குகரையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த மோதல்களை முடிவிற்கு கொண்டுவர பல உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் ஜோ பைடன் மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அமைதியை ஏற்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.