ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையே கூட்டு கடற்படை பயிற்சி
இந்திய பெருங்கடலில் மாத இறுதியில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கடற்படையினர் இணைந்து கூட்டாக பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பிஜஷ்கியான் இடையே கடந்த ஜனவரியில், வர்த்தகம் மற்றும் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த சூழலில், ஈரான், சீனாவுடனான கூட்டு கடற்பயிற்சியில் ரஷியா ஈடுபட உள்ளது.
இதுபற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பாதுகாப்பு வளையம்-2025 என்ற பெயரில் மார்ச் மாத இறுதியில், இந்திய பெருங்கடலில் ஈரான் நாட்டுக்கு பக்கத்தில் சீனா மற்றும் ஈரானுடன் சேர்ந்து ரஷ்யா கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட உள்ளது என தெரிவித்து உள்ளது.