உக்ரைன் அகதிகளுக்காக நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்
உக்ரைன் அகதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏலம் விடப்போவதாக ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் (60). அவர் நோவயா கெஸெட்டா பத்திரிகையின் ஆசிரியராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் உள்ளார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மாஸ்கோவில் முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக நோபல் பரிசை வழங்கினார்.
இந்நிலையில் தற்போது உக்ரைனில் உள்ள அகதிகளுக்கான உணவு மற்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தனது நோபல் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.
இதுவரை 35 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறுகிறார்கள்.