தவளையின் நலனுக்காக சாலை அமைக்கும் பணியையே நிறுத்த உத்தரவிட்ட கனேடிய நீதிமன்றம்
மொன்றியலுக்கு தெற்கே சாலை அமைக்கும் பணி ஒன்று அழிவின் விளிம்பிலிருக்கும் தவளை இனம் ஒன்றின் வாழிடத்தை சேதப்படுத்தும் என்பதற்காக, அந்த பணியை தற்காலிகமாக நிறுத்தும்படி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
கியூபெக்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பான Centre québécois du droit de l’environnement அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Geneviève Paul என்பவர் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
குறிப்பிட்ட பகுதியில், western chorus frog என்னும் ஒருவகைத் தவளைகள் வாழ்ந்து வருகின்றன.
சாலை அமைப்பதால் அவற்றின் இயற்கையான வாழிடம் பாதிக்கப்படும் என கோரி அந்த சுற்றுச்சூழல் அமைப்பு வழக்குத் தொடர்ந்த நிலையில், அதை ஏற்று சாலை அமைக்கும் பணியை பத்து நாட்கள் நிறுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை சுற்றுச்சூழல் அமைப்புகள் வரவேற்றுள்ள அதே நேரத்தில், நிரந்தர தீர்வு ஒன்றைத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அத்துடன், சுற்றுச்சூழல் அமைச்சருக்கு எதிராக மற்றொரு வழக்கைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.