கனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூவருக்கு பிணை மறுப்பு
கனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூன்று பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் கியூபெக்கில் பலவந்தமான அடிப்படையில் காணிகளை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
24 வயதான சிமோன் என்ஜர்ஸ் அடெட், 25 வயதான ராபெல் லாஜெஸ் மற்றும் 24 வயதான மார்க் அருலி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் காணிகளை சட்டவிரோத கைப்பற்ற முயற்சித்தனர் எனவும், சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர் எனவும், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட முயற்சித்தனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபர் ஒருவருக்கு மட்டும் கடுமையான நிபந்தனை அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.