ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக மாறிய தீர்ப்பு!
அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு(Johnny Depp) ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்(Amber Heart) மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்த ஜானி டெப்(Johnny Depp), 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட்(Amber Heart) எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜானி டெப்பின்(Johnny Depp) கையை விட்டுச் சென்றன.
இதனால் அவதூறாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் ஆம்பர்(Amber Heart) மீது வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு(Johnny Depp) ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆம்பர்(Amber Heart) 10 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

