முடிவிற்கு வருகின்றது ஜஸ்டின் ட்ரூடோ அரசியல்!
தொடர்ந்து ஒன்பது வருடமாக நிலைத்துநின்ற பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
எனினும் தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.
லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை 2025 ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என தெரிவி;த்துள்ளதாக ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் - நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.
அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.