5 பாடசாலை மாணவிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!
களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் எச்.பி.வி தடுப்பூசி செலுத்திய 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும், 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 26 மாணவிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதில் 5 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்குருவத்தோட்ட பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HPV தடுப்பூசி செலுத்தி ய பின்னர் ஐந்து மாணவிகளுக்குத் தலைவலி, வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர்கள் ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.