மருத்துவ அறிக்கையை வெளியிட்ட வேட்பாளர் கமஹா ஹாரிஸ்! நெருக்கடியில் டிரம்ப்
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் இந்திய வம்சாவளிச் சேர்ந்த கமஹா ஹாரிஸும், டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை கமலா ஹாரிஸின் வைத்தியர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார்.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்துள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில் கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கமலா ஹாரிசுக்கு முன்பு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வயது ஆகிவிட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளதால் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.