கமலா ஹாரிஸின் இட்லி மீதான காதல்: புத்தகத்தில் வெளியான சுவாரசிய தகவல்

Fathima
Report this article
விஅமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஆப்ரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவரது சிறு வயது முதல் அரசியல் பயணம் வரை இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரபல பத்திரிக்கையாளர் சித்தானந்த ராஜ்கட்டா புத்தகமாக எழுதியுள்ளார்.
மொத்தம் 300 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாம்.
கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம்பெற்றுள்ளதாம்.