பிரதமர் மோடிக்கு கமலா ஹாரீஸ் புகழாரம்
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் டுவிட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரீஸ் டுவிட்டரில் பெருமிதம்
"இந்திய-அமெரிக்க கூட்டு, இதுவரை இல்லாத வகையில் வலிமையாகி உள்ளது. நாம் இன்னும் வளமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருப்பதால், நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்" என கமலா ஹாரீஸ் கூறி உள்ளார்.
அதோடு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையோன கூட்டு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமானது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நமது கூட்டினை, விண்வெளியில் இருந்து ராணுவம் வரை, தொழில் நுட்பம் தொடங்கி வினியோகச்சங்கிலிகள் வரை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கமலா ஹாரீசுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில்,
" நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. நானும் நமது கூட்டுறவை எதிர்காலம் சார்ந்த துறைகளில் உயர்த்துவதில் சம அளவில் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.