ஆப்கான் தலிபான் வசமான நிலையில் திடீர் சுற்றுபயணம் மேற்கொண்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி தங்களது வசம் கொண்டு வந்துள்ள நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது நாட்டு மக்களை விமானம் மூலம் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கமலா ஹாரிஸ் இன்று காலை சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் நாளை நாட்டின் முக்கியமான தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கமலா ஹாரிசின் இந்த சுற்றுப்பயணம் ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.