தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் பிரபல தமிழ் தொழிலதிபர் (Video)
எனக்கு அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் இல்லை அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள அரசியலை பார்க்கும் போது கவலையாக உள்ளது என பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சியின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ஒரு இனம், அந்த இனத்தை வழிநடத்த கூடிய தலைமைகள் இன்று இந்த மண்ணில் இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2009 ஆம் ஆண்டு வரை ஒரு பெயருக்காக ஒரு இனம் நேர்கோட்டில்,நிதானமாக ஒரு கட்டுகோப்புடன் பயணித்தது.
ஆனால் 2009 இற்கு பின்னர், எமது கலாசாரம், எதிர்காலத்தை உருவாக்க கூடிய இளைய சமுதாயம் என ஒவ்வொரு விடயத்திலும் அது சிதறிப்போய் இருப்பதை நாங்கள் கண் முன் பார்க்கின்றோம்.
இதை ஒரு வரையறைக்குள் வைத்து வழிநடத்த கூடியது அரசியலாக தான் இருக்கும். வேறு எதனாலும் இதை வழிநடத்த முடியாது.ஆனால் அப்படியான அரசியல் தலைவர்கள் இங்கு இல்லை.”என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கலந்துரையாடிய முழு விடயங்களையும் இந்த காணொளியில் காணலாம்,