தங்க நிற கவுனில் பேரழகியாய் ஜொலித்த பிரித்தானியா இளவரசி: வைரல் புகைப்படங்கள்
லண்டனில் நடந்த No Time to Die என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ப்ரீமியர் ஷோவில் தங்க நிற கவுனில் வந்து அசத்தியுள்ளார் பிரித்தானியா இளவரசியான கேட் மிடில்டன்.
ஜேம்ஸ் பாண்டின் நடிப்பில் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான படம் ”No Time to Die”.
இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களைவிட, இந்த படத்தின் ரன்னிங் டைம் அதிகம். சுமார் 2 மணி 43 நிமிடங்கள்.
இப்படத்துக்கான ப்ரிமீயர் ஷோ, Royal Albert Hall-ல் நடந்தது, ஏராளமான திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் வருகை தந்தனர்.
தங்க நிற கவுனில் வலம் வந்த கேட் மிடில்டனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Picture Courtesy- Getty Images


