மேகன் மீது கடும் சீற்றத்தில் கேட் மிடில்டன்!
பிரிட்டிஸ் மகாராணியின் இறுதிநிமிடங்களில் அவருடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் இளவரசர் ஹரியின் மனைவி மேகனால் கேட் வில்லியமிற்கு பறிபோனது.
இதன் காரணமாக இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இதன் காரணமாக மேகன்மீது சீற்றத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரசகுடும்பம் குறித்து வெளியாக உள்ள புதிய நூலில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
மன்னர் நிராகரிப்பு
இளவரசர் ஹரியின் மனைவி பிரிட்டிஸ் மகாராணியை பார்ப்பதை சார்ல்ஸ் விரும்பவில்லை. இதன் காரணமாவே அவர் வில்லியமின் மனைவியையும் வரவேண்டாம் என தெரிவித்தார்.
இதன் மூலம் அவர் மேகன் பிரிட்டிஸ் மகாராணியை உயிருடன் பார்ப்பதை தடுத்தார் என புதிய நூலின் ஆசிரியர் ரொபேர்ட் ஜொப்சன் தெரிவித்துள்ளார்.
ஹரி தனது மனைவி பிரிட்டிஸ் மகாராணியை உயிருடன் பார்க்கவேண்டும் என விரும்பினார்.
எனினும் கேட் மிடில்டன் பிரிட்டிஸ் மகாராணியை இறுதியாக ஒரு தடவை பார்ப்பதை சார்ல்ஸ் விரும்பவில்லை என நூலாசிரியர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் மகாராணியை பார்ப்பதற்காக மேகன் ஸ்கொட்லாந்திற்கு வருவதற்கு அனுமதிக்கவேண்டும் என ஹரி வற்புறுத்தினார்.
மேகன் மீது கடும் கோபத்தில் கேட்
ஆனால் மன்னர் மகாராணியின் பிள்ளைகளிற்கும் பேரப்பிள்ளைகளிற்கும் மாத்திரம் அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருந்தார் என ரொபேர்ட் ஜொப்சன் தெரிவித்துள்ளார்.
மேகன் வருவது தனக்கு விரும்பவில்லை என தனிப்பட்ட ரீதியில் தெரிவிப்பதற்கு சார்ல்ஸ் விரும்பினார். எனினும் ஹரியிடம் அவரால் இதனை தெரிவிக்க முடியவில்லை. அதனால்தான் மன்னர் கேட்டையும் வரவேண்டாம் என தெரிவித்தார்.
இதன் மூலம் மேகன் பிரிட்டிஸ் மகாராணியை பார்ப்பதை தடுத்து நிறுத்தினார் என ஜொப்சன் தெரிவித்துள்ளார்.
அதோடு இளவரசர் வில்லியம் மகாராணிக்கு இறுதிவிடை கொடுத்தவேளை தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட மேகன் காரணம் என்பதால் கேட் மேகன் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் ஜொப்சன் தெரிவித்துள்ளார்.