பள்ளிகள் செயல்படட்டும்... அரசாங்கத்தை வலியுறுத்திய 500 கனேடிய மருத்துவர்கள்
கொரோனா ஓமிக்ரான் மாறுபாடு வேகமாகப் பரவிவரும் நிலையிலும் பள்ளிகளைத் திறந்து வைக்குமாறு 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்ராறியோ அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த மருத்துவர்கள், முதல்வர் டக் ஃபோர்டு , கல்வி அமைச்சர் மற்றும் மாநிலத்தின் முதன்மை மருத்துவர் ஆகியோருக்கு திறந்த மடல் ஒன்றை இது தொடர்பில் எழுதியுள்ளனர்.
அதில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாகாண பள்ளிகளை மூடுவதை அரசு வாடிக்கையாக பயன்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மார்ச் 2020 முதல் நீண்டகாலமாக பள்ளிகள் மூடப்படுவதால் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை அனுபவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் நாம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாநிலத்தில் ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பள்ளிகளை மீண்டும் திறக்கலாமா என்பது தொடர்பில் உரிய முடிவெடுக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்துள்ளது. பள்ளிகள் திறந்து செயல்படுவது சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் அத்தியாவசியமான ஒன்று என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.
குறித்த கடிதத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தில் இருந்தும் மருத்துவர்கள் கையெழுத்து பதிவு செய்துள்ளதுடன்,
பாதுகாப்புடன் பள்ளிகளை எவ்வாறு செயல்படுத்தலாம் எனவும் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.