வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல் ; புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர்!
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார்.
2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரிட்டனின் தோள்களில் இருந்த பெருஞ்சுமை இறுதியாக அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் தலைவரும் புதிய பிரதமருமான கெய்ர் ஸ்டார்மெர் மாற்றம் தற்போது ஆரம்பமாகின்றது என தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.