ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படையிலிருந்து விலகிய முக்கிய புள்ளி
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலான், பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ஜான் பெலான் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடற்படை துணைச் செயலாளர் ஹங்காவோ, கடற்படையின் தற்காலிக செயலாளராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்தது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் செயலாளர் பதவி விலகி உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜான் பெலான் போதுமான வேகத்தில் செயல்படவில்லை என்பதால் அவரை ஜனாதிபதி ட்ரம்ப் பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.