பிரித்தானியாவில் கைதான காலிஸ்தான் ஆதரவாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் முன்பு அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஓகஸ்டு மாதம் 15-ம் திகதி இந்திய சுதந்திர தின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக முறைப்பாடுகள் எழுந்தது.
இது தொடர்பான காணொளியும் சமூக வலைதளங்களில் வெளியானது. இச் சம்பவம் தொடர்பாக குர்பி ரித் சிங்கை பிரித்தானிய பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 28 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.