பிரான்ஸில் கடத்தப்பட்ட சிறுமி ; ஐரோப்பா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை ; கடைசியில் எங்கே மீட்கப்பட்டார் தெரியுமா?
பிரான்ஸில் கடத்தப்பட்ட சிறுமி டென்மார்க்கில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் கடந்த இரு நாட்களாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய Eya எனும் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம், முடிவுக்கு வந்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் பிடியாணை
கடந்த வியாழக்கிழை காலை Fontaine, (Isère) நகரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தையினால் வியாழக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதுடன் ஐரோப்பா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பாடசாலை வாசலில் வைத்து கடத்தப்பட்டமை மாணவர்களின் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் டென்மார்க்கில் வைத்து சிறுமி அந்நாட்டு காவல்துறையினரால் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாகவும், நலமுடனும் உள்ளார். சிறுமி தொலைபேசியூடான Fontaine நகரில் உள்ள அவரது தாயுடன் உரையாடியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் சிறுமி பிரான்சுக்கு அழைத்து வரப்படுவார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.