கனடாவில் பண வீக்கம் காரணமாக அதிகமான பாதிப்பு யாருக்கு!
கனடாவில் பண வீக்கம் காரணமாக அதிக அளவு பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இன்னமும் பணவீக்கம் காரணமாக குறிப்பாக வாழ்க்கைச் சொலவு அதிகரிப்பு காரணமாக கனடிய குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவு பண வீக்கம் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உணர நேரிடவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 திகதி முதல் 26 ஆம் திகதி வரையில் இது தொடர்பான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் அவசர செலவுகளை தம்மால் ஈடு செய்வதற்கு முடியவில்லை என தெரிவித்துள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        