பிரித்தானியாவில் 9 வயது சிறுமி கொலை சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் புகுந்து 9 வயது சிறுமியை கொலை செய்த நபருக்கு 42 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி, லிவர்பூலின் டோவ்காட்டில் உள்ள போதைப்பொருளை விநியோகிக்கும் ஜோசப் நீ என்ற நபரை கேஷ்மேன் என்பவர் துரத்திச் சென்றுள்ளார்.

இதன்போது ஒரு வீட்டினுள் நுழைந்த ஜோசப்பை நோக்கி கேஷ்மேன் துப்பாக்கியால் சுட்டபோது, ஒலிவியா என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உரியிழந்தார்.

மேலும் இச் சம்பவத்தில் சிறுமியின் தாயார் காயமடைந்தார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி சந்தேகநபரான கேஷ்மேனுக்கு 42 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.