ஒன்ராறியோ தம்பதி தொடர்பில் புகைப்படம் வெளியிட்ட பொலிசார்
ஒன்ராறியோ தம்பதி மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, தற்போது ரொறன்ரோ நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 18ம் திகதி ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த Kristy Nguyen(25) மற்றும் Quoc Tran(37) ஆகியோர் திடீரென்று மாயமாகினர்.
இவர்கள் தொடர்பில் பொலிசார் தீவிரமாக விசாரணை முன்னெடுத்து வந்த நிலையில், யார்க் பிராந்திய காவல்துறையின் விசாரணை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், Nguyen மற்றும் Tran தம்பதி திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம் எனவும்,
ஆனால் இலக்கு வைக்கப்பது அவர்களுக்கு இல்லை என்றே நம்புவதாக தெரிவித்துள்ளனர். குறித்த தம்பதி மாயமான செப்டம்பர் 18ம் திகதியே, அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Phuong Tan Nguyen என்பவரை தேடி வருவதாகவும், நாடுதழுவிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில், சடலங்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.