ஹமாஸ் அரங்கேற்றிய சம்பவம்! ஆதாரத்துடன் அம்பலம்
ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகளின் பற்களை பிடுங்கி அவர்களை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அக். 07ம் திகதி இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முதலில் இஸ்ரேல் எதிர்பாரவில்லை எனினும், தற்போது ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியம் எளிதில் எழுச்சியடையாத அளவுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
பயங்கர சம்பவங்களை அரங்கேற்றிய ஹமாஸ்
போரின் தொடக்கத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொடூர கொலைகளை செய்தனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட குழந்தைகளின் பற்களை பிடுங்கி, தீயிட்டு எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளை சித்ரவதை கொலைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாதிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னதாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலிய மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அவர்களின் தலையை வெட்டி துண்டித்து வைத்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை கிப்புட்ஸ் பீரியின் கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள்.
அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, உறுப்புகள் வெட்டப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.