கனடாவில் இளம் வயது சகோதர்களை கொடூரமாக கொன்ற நபர்: கண்ணீரில் குடும்பம்
கனடாவின் ஒன்ராறியோவில் இளம் வயது சகோதரர்கள் இருவர் வாகனம் மோதி பலியான வழக்கில் சாரதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அந்த சாரதியின் வயது 16 என்பதால், அவர் சிறார் சீர்திருத்த வசதியில் அனுமதிக்கப்பட உள்ளார். மட்டுமின்றி, 6 மாத காலம் அவர் கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும், 6 ஆண்டு காலம் அவரது சாரதி உரிமம் முடக்கடும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாகன் பகுதியில் உள்ள அதாபாஸ்கா சாலையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணித்த போது, தனது தந்தையின் மெர்சிடிஸ் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அந்த இளைஞர் விபத்தில் சிக்கியுள்ளார்.
சாலையோரத்தில் அப்போது நின்றிருந்த சகோதரர்கள் இருவர் மீதும் மோதிய மெர்சிடிஸ், இன்னொரு ஒரு உறவினர் மீதும் மோதியது. இதில் சகோதரர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, லேசான காயங்களுடன் அந்த உறவினர் தப்பினார்.
இந்த நிலையில் 4 வயதேயான ஜாக்ஸ் சவுதாரி சம்பவத்தன்றே சிகிச்சை பலனின்றி மரணமடைய, அடுத்த நாள் அவரது சகோதரி 10 வயது அனன்யா சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்தது.
இதனையடுத்து, 16 வயதான சாரதி கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியது, மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்குள், திங்கட்கிழமை குறித்த சாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பின் போது மரணமடைந்த சகோதரர்களின் பெற்றோர் கேதன் மற்றும் பிந்தா சவுதாரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திலேயே இருந்துள்ளனர்.
மேலும், மிகக் கடுமையான சூழலில் தாங்கள் இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.