'Kinzhal' ஹைபர் சொனிக் ஏவுகணை தாக்குதல்: ரஷ்ய அதிபர் பூட்டினுக்கு என்ன நடந்தது?
அண்மையில் ரஷ்யாவின் அதிஉச்சக் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான Kh-47M2 Kinzhal hypersonic ballistic missileசை உக்ரேன் நிலைகள் மீது எதற்காக ஏவியது ரஷ்யா?
அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு, ரஷ்யாவின் முக்கிய எதிரியான நேட்டோப் படைகள் மீது அழித்தொழிப்பு தாக்குதலை நடாத்துவதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு ஏவுகணைதான் இந்த 'Kinzhal' என்ற ஏவுகணை.
உக்ரேனுக்குள் நுழைந்துவிட்டுள்ள பல லட்சம் ரஷ்யப் படையினருக்கு எதிராக ஒருவித கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடாத்தி வருகின்ற உக்ரேன் படையினருக்கு எதிராக ரஷ்யாவின் அதி உச்ச கண்டுபிடிப்பான Kinzhal ஏவுகணையை ஏவியது ஏன்?
மேற்குலக நாடுகளை குறிவைத்து ரஷ்ய அதிபர் அணு ஆயுத மிரட்டல்களை விடுத்தது ஏன்?
ரஷ்யா மிகப் பயங்கரமான அணுவாயுதங்களை வைத்திருக்கின்றது என்பது உலக நாடுகள் அத்தனைக்கும் நன்றாகவே தெரியும்.
தனது நாடு ஆழியும் ஒரு நிலை வந்தால் அந்த ஆணு ஆயுதங்களை ரஷ்யா மட்டுமல்ல அணுவாயுதங்களை வைத்திருக்கின்ற அத்தனை நாடுகளுமே பாவிக்கத் தயங்கமாட்டாது என்பதும் அனைவருக்குமே தெரியும்.
அப்படி இருக்க அணுவாயுதங்களை உபயோகிப்பேன் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்ததானது எதற்காக?
இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: