ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவருகின்றதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், காலி பணியிடங்களில் பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதை வணிகர்களிடையே ஊக்குவிக்க அந்நாட்டின் குவின்ஸ்லாந்த் மாநில அரசாங்கம் 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை செலவழிக்க உள்ளது.
அதே போல் குடியேறிகள், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள் வேலைகளைத் தேடுவதற்கு உதவுவதற்காக மேலும் 14 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட உள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்குகள் படி, 2020 மற்றும் 2025 இடையிலான ஆண்டுகளில் குவின்ஸ்லாந்தின் மொத்த வேலையிடங்களில் எண்ணிக்கை 280,000 ஆக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஓய்வூதிய வயதை நபர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என கூறப்படுகிறது. “நமது பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் குவின்ஸ்லாந்துக்கு கூடுதலாக 280,000 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்,” என குவின்ஸ்லாந்த் முதலமைச்சரான Annastacia Palaszczuk கூறியிருக்கிறார் .
அதோடு உழைப்புச்சக்தியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இடத்தை ஏற்படுத்தும் விதமாக வணிகர்களை ஊக்குவிப்பதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
குடியேறிகள், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள் வேலைத்தேடுவதற்கான சேவை 5.6 மில்லியன் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்படும் என்றும், குவின்ஸ்லாந்தின் Townsville, Rockhampton, Sunshine Coast ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்ய 5.45 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குவின்ஸ்லாந்தில் குடியேறிகள் மற்றும் அகதிகள் குடியமருவதற்கு உதவும் விதமாக திறன்வாய்ந்த தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான அலுவலகம் 3 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.