லாட்டரியில் கிடைத்த பெரும் தொகை; நெகிழவைத்த பிரித்தானிய தம்பதிகள்!
பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, அவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்கள்.
Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இது குறித்து Sharon தெரிவிக்கையில்,
“இதனை நாங்கள் பெருமைக்காக செய்யவில்லை. எங்களுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு செய்யும் உதவியாக பார்க்கிறோம். ஒவ்வொருவரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று காசோலைகளை கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.
அதேவேளை Sharon-Nigel என்ற தம்பதியருக்கு 15 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பலரும் குறித்த தம்பதிகளின் செயலை பாராட்டி வருகிறார்கள்.