அமெரிக்கவின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பமுடியாத வகையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்த வான்ஸ், ட்ரம்ப் தனது பதவிக்காலம் வரை பணியாற்றுவார் எனத் தெரிவித்தள்ளார்.
பயங்கரமான சோகம் நடைபெற்றால்
பயங்கரமான சோகம் நடைபெற்றால், தற்போது கடந்த 200 நாட்களுக்கு மேலான நான் என்ன செய்தனோ, அதைவிட சிறந்த பயிற்சி வேலை இருப்பதாக நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஜே.டி. வான்ஸ் இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தானும், தன்னுடைய மனைவி உஷாவும் தற்போதுள்ள வேலையில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஒருவேளை கூடுதல் பதவிக்கான (அமெரிக்க ஜனாதிபதி) கதவு திறக்கப்பட்டார், அப்போது அதுகுறித்து சிந்திப்போம் எனவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.