அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு IBM நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்காள் தெரிவிக்கின்றன.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் செயல்படும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான IBM, HCL உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்தியர்களை பணியமர்த்தி வருகிறது.

இந்தியர்கள் கடும் அதிர்ச்சி
இதற்காக, H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் செய்து வருகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதில் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறார்.
H-1B விசா தொகையை பல மடங்கு உயர்த்தி விட்டார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான IBM தனது கன்சல்டிங் பிரிவில் பெரும்பாலான பணிகளுக்கு விசா மற்றும் கிரீன் போர்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கிறது.
இதனால் பாதிக்கப்படும் அமெரிக்க ஊழியர்கள் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்து பணியை தொடரலாம் அல்லது ராஜினாமா செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முடிவெடுக்க 3 வார கால அவகாசமும் வேலையை விட்டு செல்ல 3 மாத ஊதியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 31ம் தேதி கடைசி வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பணி செய்யும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.