ரஷ்யா-உக்ரைன் போரால் லெபனான் அரசு இந்தியாவுடன் கூட்டணி
ரஷ்யா-உக்ரைனில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து லெபனானுக்கு கோதுமை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய லெபனான் அரசு திட்டமிட்டுள்ளது.
50 ஆயிரம் டன் கோதுமையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவதற்கான டெண்டருக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர் முன்பணத்தை விடுவிக்க லெபனான் மத்திய வங்கியிடம் அனுமதி கோரியுள்ளதாக அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் அமின் சலம்(Amin Salam) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஒப்புதல் வந்ததும் இந்தியாவிடம் இருந்து டெண்டர் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லெபனானுக்கு கோதுமை வழங்குமாறு அமெரிக்கா மற்றும் கஜகிஸ்தானிடம் கேட்கப்பட்டதாகவும், கோதுமையின் ரகம் மற்றும் விலை குறித்து இரு நாடுகளும் இன்னும் பதில் அளிக்கவில்லை எனவும் அமின் சலம் (Amin Salam)கூறியுள்ளார்.
