லெபனான் விரைவில் தோல்வியடைந்த நாடாக மாறும்!
லெபனான் விரைவில் "தோல்வியடைந்த நாடாக" மாறுவதை தவிர்க்க முடியாது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்ததைக் கண்டித்து அவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு நடந்திருப்பது நாட்டின் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்தை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர்.
இதன் காரணமாக லெபனானில் தற்போது, நாட்டின் பொதுத்துறை தொடர்ந்து செயலிழந்து வருகிறது. அதேசமயம் இந்த வாரம் நாட்டின் நீதிபதிகளும் போராட்டம் நடத்தத் ஆரம்பித்துள்ளனர்.
மேலும், நாட்டில் பல அலுவலகங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்பதுடன் அன்றாட நடவடிக்கைகளை பராமரிக்க தேவையான பணமும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.