ட்ரம்பின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு பதிலளிப்பது அரசாங்கத்தின் பணியல்ல
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து சமூக ஊடகப் பதிவுகளுக்கு பதிலளிப்பது கனடிய அரசாங்கத்தின் பணியல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் டொமினிக் லிபிலான்க் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கனடா தொடர்பில் அண்மையில் ட்ரம்ப் பல்வேறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றார்.
குறிப்பாக அமெரிக்காவின் 51ம் மாநிலமாக கனடாவை மாற்ற வேண்டுமென்ற அர்த்தத்தில் அண்மையில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அனைத்து பதிவுகளுக்கும் பதிலளிப்பது லிபரல் அரசாங்கத்தின் பணி கிடையாது என அமைச்சர் லிபிலான்க் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நகைச்சுவைக்காக இந்த விடயத்தை கூறியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.