கோவிட் காலத்தில் கனடிய மக்களுக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட 9 பில்லியன் டொலர்கள்
கோவிட் காலத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நலன்புரித் திட்டக் கொடுப்பனவுகளை மீள வசூலிக்கும் முயற்சிகளில் கனடிய வருமான முகவர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர் நோக்கியவர்களுக்கு கனடிய அரசாங்கம் கொடுப்பனவு தொகைகளை வழங்கியிருந்தது.
சுமார் 9 மில்லியன் டாலர்கள் வரையில், இவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கு நலன்புரி கொடுப்பனவாக கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கூடுதல் தொகை பணம் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அறவீடு செய்யும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூடுதலாக பெற்றுக் கொண்டவர்களின் சம்பளங்கள் அல்லது வங்கிக் கணக்குகள் ஊடாக மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகைகள் அறவீடு செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூடுதலாக நிதி செலுத்தப்பட்டவர்களில், மீள அளிப்பதற்கு ஒத்துழைக்காதவர்கள் அல்லது பதிலளிக்காதவர்களிடம் மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கூடுதலாக பெற்றுக் கொண்டவர்கள் ஏதேனும் ஒரு வழிமுறையில் கடனை மீள செலுத்துவதற்கு ஊக்குவிப்பதே தமது இலக்கு என மேலும் தெரிவித்துள்ளது.