உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆர்மானி காலமானார்
உலகின் புகழ்பூத்த ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ ஆர்மானி தனது 91ம் வயதில் காலமானார்.
நவீன பாணியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சூட் வடிவமைப்பை மறுவடிவமைத்து உலக ஃபேஷன் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
1975-இல் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கிய அவர், அதை உலகளாவிய பேரரசாக விரிவுபடுத்தினார்.
உலகப் பிரபலங்கள் பலர் இரங்கல்
அழகு சாதனங்கள், வாசனை திரவியங்கள், இசை, விளையாட்டு, பிரமாண்ட ஹோட்டல்கள் என பல துறைகளில் ஆர்மானி வர்த்தக முயற்சிகள் வியாபித்தன. அவரின் மறைவிற்கு உலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் வெளியிட்டுளள்னர்.
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, “இத்தாலிய ஃபேஷனை உலக மேடையில் உயர்த்திய சின்னம்” என ஆர்மானியை புகழ்ந்துரைத்துள்ளார்.
சினிமா, விளையாட்டு, இசை உலக நட்சத்திரங்களுக்காக அவரது படைப்புகள் மெருகூட்டின.
எளிமை, அழகு, நேர்த்தி ஆகியவற்றின் உருவகமாக அவர் நினைவுகூரப்படுவார். உலக ஃபேஷன் வரலாற்றில் அழியாத தடம் பதித்த ஆர்மானியின் மரணம் இந்த துறைக்கு பெரும் இழப்பாகும் என தெரிவிக்கப்படுகின்றது.