எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் புதிய மருந்து lenacapavir!
எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கும் புதிய மருந்தான லெனகாபவிர் (lenacapavir), குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவ்லக்ள் வெலியாகியுள்ளது.
உலகப் பெரும் பணக்காரகளில் ஒருவரான, பில்கேசின் , பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற உலக சுகாதார அமைப்புகள், மருந்து நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.
இது எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு பெரிய படியாகக் கருதப்படுகிறது.
லெனகாபவிர் (Lenacapavir)
லெனகாபவிர் (Lenacapavir) என்பது, எச்.ஐ.வி (HIV) நோய்த்தொற்றைத் தடுக்கும் ஒரு ஊசி மருந்து. இது ஒரு வருடத்திற்கு இரண்டு முறை செலுத்திக்கொண்டால் போதும்.
இந்த மருந்தை உற்பத்தி செய்ய, இந்திய மருந்து நிறுவனங்களான ஹெட்டெரோ லேப்ஸ் (Hetero Labs) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் (Dr. Reddy’s Laboratories) ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 120க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், இந்த மருந்து ஒரு நோயாளிக்கு வருடத்திற்கு $40 (சுமார் ₹3,300) என்ற விலையில் 2027 முதல் கிடைக்கும்.
அமெரிக்காவில், இதே மருந்தின் விலை வருடத்திற்கு $28,218 (சுமார் ₹23.5 லட்சம்) ஆகும். இந்த விலை குறைப்பு, ஏழை நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த மருந்து கிடைக்க உதவும்.
இந்த ஒப்பந்தங்கள், எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும், இது சமூகத்திற்கு பெரும் பலனை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.