இம்ரான் கான் இந்தியா செல்லட்டும்...சாடிய எதிர்கட்சி தலைவர்
பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் கூறுகையில், இம்ரான் கான் இந்தியாவை உண்மையிலேயே நேசித்தால் அந்த நாட்டுக்கு செல்ல வேண்டும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டில் ஆற்றிய உரையில், “எந்தவொரு வல்லரசும் இந்தியாவைத் தன் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும்படி கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.
இது ஒரு இறையாண்மை கொண்ட நாடு. " இதுகுறித்து அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் கூறுகையில்
, “இம்ரான் கான் உண்மையிலேயே இந்தியாவை விரும்பினால், அவர் அந்த நாட்டுக்கு செல்ல வேண்டும். "பாகிஸ்தானை வாழ விடுங்கள். அரசியலமைப்பு, ஜனநாயகம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் இம்ரான் கானைப் போல் யாரும் விளையாடவில்லை. அவரைப் பிரதமராகவோ அல்லது முன்னாள் பிரதமராகவோ கருதக்கூடாது. அவரை மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருத வேண்டும்," என்று அவர் கூறினார்.