வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்!

police girl chennai suicide tamil nadu
By Shankar Jun 27, 2021 09:01 AM GMT
Report

திருமணமான சில மாதங்களில் இளம் பெண் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம்  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 100 சவரன் நகை, ஒன்றரை ஏக்கர் நிலம், கார் போன்றவை போதாது எனக் கூறி இளம் பெண் மருத்துவரை அவரது கணவரும், மாமனார், மாமியாரும் கொடுமை படுத்தியதால், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

சென்னை கே.கே.நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான நான்கே மாதத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு இளம் பெண் கண்ணீருடன் கதறிய காணொளியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. பட்டதாரியான இவருக்கும், திருமுல்லைவாயலை சேர்ந்த எலக்ட்ரீசியனான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமானது முதலே கணவரும், மாமியாரும் ஜோதிஸ்ரீயிடன் வரதட்சனை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் கடன் பெற்று புதிய வீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

அந்த கடனை அடைக்க பிறந்த வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும் படி ஜோதிஸ்ரீயை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் பாலமுருகனை விட்டு பிரிந்த ஜோதிஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

கணவர் மனம் மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிஸ்ரீ மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த மாமியார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

கணவரை காண்பதற்காக வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்ற ஜோதிஸ்ரீ காத்திருந்த போது, மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அறையின் மின் வயரையும் துண்டித்துள்ளார்.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில் மாமியார் மற்றும் கணவரின் கொடுமைகளை கண்ணீர் மல்க காணொளி எடுத்தும், கடிதம் மூலம் எழுதி வைத்தும் சென்றுள்ளார் ஜோதிஸ்ரீ.

காணொளியில், தனக்கு நடந்த கொடுமையை விபரித்துள்ளார். ஒற்றை தாலிக்காக பைத்தியம் பட்டம் சுமக்க வேண்டியிருப்பதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

செல்போனில் இருந்த காணொளிகளை அழித்த பாலமுருகன் மற்றும் அவரது வீட்டார், ஜோதிஸ்ரீ எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தெரியாதது போல் நடத்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஆவடி காவல்துறையினர், ஜோதிஸ்ரீ இறந்த ஒரு மாதத்திற்கு பிறகு அவரது செல்போனில் அழிக்கப்பட்ட காணொளியை மீண்டும் மீட்டுள்ளனர்.

காணொளியில் ஜோதிஸ்ரீ தன்னுடைய தற்கொலைக்கு காரணமான கணவரையும் அவரது குடும்பத்தினரையும் விட வேண்டாம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன், மாமியார், பாலமுருகனின் அண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US