கனடிய பிரதமரை பதவி விலகுமாறு பகிரங்க கோரிக்கை!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலகுமாறு அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லிபரல் கட்சியின் பின்வரிசை உறுப்பினரான சீன் கேசீ என்பவர் இவ்வாறு பகிரங்க கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
சீன், சார்லடோன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலக வேண்டுமென மக்கள் வெகுவாக எதிர்பார்க்கின்றனர் எனவும் மக்களின் மனநிலை அதுவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுமாறு அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.