கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மன்னிப்பு கோர வேண்டுமென கோரும் சபாநாயகர்
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவ்ரே அண்மையில் கனடிய பொலிஸார் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் ஸ்டீவன் மேக்கின்னன், வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் வெளியான ஒரு யூடியூப் நேர்காணலில், கன்சர்வேட்டிவ் தலைவர் பொலிவ்ரே, கனடிய பொலிஸ் தலைமை “அவமானகரமானது” என்றும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
ட்ரூடோ பதவி வகித்த காலத்தில் விடுமுறைக்காக சென்ற பயணங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாகத் பொலிவ்ரே குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு நடந்த "ஆகா கான்" விவகாரத்தை சுட்டிக்காட்டியதுடன் அதற்காக ட்ரூடோவை சிறையில் அடை்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிவ்ரேவின் குற்றச்சாட்டை மறுத்து அந்த சம்பவத்தில் கனடிய குற்றச் சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் இல்லை” என பசுமைக் கட்சி தலைவர் எலிசபெத் மே, விளக்கமளித்துள்ளார்.
பொலிவ்ரேவின் கருத்துகள் நீதித்துறை மற்றும் பொலிஸாரின் சுயாதீனத்தை கேள்விக்குறியாக்குவதாக சபாநாயகர் மேக்கின்னன், என தெரிவித்தார்.
ஆனால், பொலிவ்ரே நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கவில்லை. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரது பேச்சாளர், “அந்த கருத்துக்கள் முன்னாள் பொலிஸ் ஆணையாளர் பிரெண்டா லக்கி குறித்து மட்டுமே கூறப்பட்டவை” என்று விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் கனடா அரசியலில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது, குறிப்பாக சட்ட அமலாக்க அமைப்பின் சுயாதீனம் மீதான மரியாதை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.