கெரி ஆனந்த சங்கரி இன்று வெளியிட உள்ள விசேட அறிவிப்பு
கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இம்மாதம், லிபரல் அரசு தமது எல்லைப் பாதுகாப்பு மசோதாவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது — சில முக்கிய பிரிவுகளை விரைவாக நிறைவேற்றவும், விவாதத்திற்குரிய பகுதிகளுக்கு கூடுதல் பரிசீலனை நேரம் வழங்கி பின்னர் நிறைவேறற்வும் திட்டமிட்டுள்ளது.
புதிய மசோதாவில், கடலோர பாதுகாப்புப் படையின் (Coast Guard) பங்கு விரிவுபடுத்துதல், குடியேற்ற மற்றும் அகதி முறைமையை வலுப்படுத்துதல், பாலியல் குற்றவாளிகளின் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் இரசாயனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.
அதே சமயம், அதிகாரிகளுக்கு தனிப்பட்ட தகவல்களை அணுகும் அதிகாரம் மற்றும் அஞ்சல் பார்சல்கள் தேடும் புதிய அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய பிரிவுகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது.
இவ்வகையான பிரிவுகள் குடிமக்கள் உரிமைகள் சார்ந்த அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன.